• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தஞ்சையில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை..!

ByKalamegam Viswanathan

Oct 6, 2023

தஞ்சாவூரில் முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுவதால், இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் இன்று காலை தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக விமானம் மூலம் இன்று காலை 10:30 மணிக்கு சென்னையில் இருந்து விமான மூலமாக திருச்சிக்கு சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சை செல்கிறார். நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும் மாலை 6:30 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு வரும் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.
முதல்வர் வருகையையொட்டி திருச்சியில் உச்சகட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருச்சி முழுவதும் ட்ரோன்கள் ஆளில்லா விமானங்கள் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பிறப்பித்துள்ளார்.
சென்னையில் இருந்து திருச்சி வழியாக முதல்வர் ஸ்டாலின் இன்று தஞ்சை செல்கிறார். பாதுகாப்பு கருதி, முதல்வர் செல்லும் வழித்தடங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.