விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காரிச்சேரி கிராமத்தை சேர்ந்த குழந்தைராஜ், இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த நிலையில் சிவகாசியில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வாகனத்தை ஓட்டிசென்றுள்ளார்.

அப்போது திருச்சி பைபாஸ் சாலை வண்டியூர் டோல்கேட் அருகே சென்றுகொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி திடிரென நின்றபோது லாரி மீது மோதியுள்ளார்.
இந்த விபத்தில் உடல் நசுங்கி ஓட்டுனர் குழந்தைராஜ் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.