• Thu. Nov 12th, 2026

மின் கசிவு இணைப்பு வயரை மிதித்ததால் மின்சாரம் தாக்கி டிரைவர் பலி..!

ByKalamegam Viswanathan

Nov 12, 2026

திருப்பரங்குன்றம் அவனியாபுரம் விலக்கில் மதன் எடை போடும் நிலையம் உள்ளது

இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து லாரி வேன் டாட்டா ஏஸ் போன்ற வாகனங்கள் இங்கு இருக்கும் இடத்தில் வாகனத்தை நிறுத்துவது வழக்கம்

இதேபோன்று மதுரை செல்லூர் மீனாட்சிபுரத்தை சேர்ந்த சிவசாமி மகன் ஜெயராஜ் (வயது 52 ) சிவகாமி லாரி டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் சொந்தமாக ஓட்டி வருகிறார்

இவர் தனது லாரியை திருப்பரங்குன்றம் அவனியாபுரம் சாலையில் நிறுத்தி செல்வது வழக்கம் இவர் கடந்த வெள்ளிக்கிழமை லாரியை நிறுத்திவிட்டு சென்றவர்

இன்று மதியம் 3 மணியளவில் மீண்டும் தனது லாரியை எடுக்க சென்றபோது அருகில் பிளாஷ்டிக் குடோன் உள்ளது

இங்குள்ள குடோன் மோட்டார் ரூமுக்கு மின் இணைப்பு வெளிப் பகுதியில் வெள்ளை வயர் மூலமாக கொடுக்கப்பட்டுள்ளது இந்த இணைப்பில் இடையில் உள்ள வயரில் துண்டிக்கப்பட்டு அது மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.அதற்கு எந்த இன்சுலேஷன் டேப் போடாத காரணத்தால்மின் கசிவு ஏற்பட்டு உள்ளது இதனை அறியாத ஜெயராஜ் அந்த வயரை வெறும் காலில் மிதித்துள்ளார்.

இதனால் மின்சாரம் தாக்கி ஜெயராஜ் அலறிய போது அருகில் இருந்த மற்றொரு டிரைவர் வேல்முருகன் என்பவர் அவரை காப்பாற்ற சென்றார்.

அப்போது அவருக்கும் மின்சாரம் தாக்கியது இதனால் அவர் சுதாரித்து ஜெயராஜ்யை விட்டு விலகினார். ஜெயராஜுக்கு செருப்பு அணியும் பழக்கம் கிடையாது இதனால் இவருக்கு விபரீதம் ஏற்ப்பட்டு உள்ளது.

அதன் பின்பு திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு திருப்பரங்குன்றம் ஆய்வாளர் மணிகண்டன் எஸ் ஐ சக்திவேலு மற்றும் போலீசார் ஜெயராஜ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் மின் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துபிளாஸ்டிக் குடோன் ஊழியர்களிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.