திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வட மதுரை அருகே உள்ள தென்னம்பட்டியில் பெரிய மந்தைகுளம், உப்புகுளம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கிராவல் மண் அரசு அனுமதி இன்றி திருட்டுத்தனமாக டிப்பர் லாரிகளில் கடத்தப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணமாக இருந்தது.
இதனை எடுத்து அதிகாரிகள் குழுவினர் தென்னம்பட்டியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது குளங்களில் அனுமதி இன்றி திருட்டுத்தனமாக கிராவல் மண் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி வடமதுரை நோக்கி சென்று கொண்டிருந்தை மடக்கிப்பிடித்து அதனை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரித்த போது போலி அனுபவிச்சிட்டு வைத்திருந்தது தெரியவந்தது. இதன் எடுத்து டிப்பர் லாரியை வடமதுரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமதியின்றி மண் எடுத்து வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து அதனை ஓட்டி வந்த நத்தம் தாலுகா சாணார்பட்டியைச் சேர்ந்த ராஜா (வயது 26) என்பவரை கைது செய்து விஷால் நடத்தி வருகின்றனர்.
வடமதுரை மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் அதிகளவு குளங்களில் அனுமதி இன்றி கிராவல் மண் திருடப்படுவதை தடுப்பதற்கு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




