• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கழிவுநீர் கலப்பால் குடிநீருக்கு திண்டாட்டம்..,

ByG.Suresh

Jun 9, 2025

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் நாட்டார்.சி பிளாக் பகுதியில் வசித்து வரும் திவாகரன் மனைவி லலிதா ராணி தனது வீட்டிற்கு தேவையான நீரை ஆழ்துளை கிணறின் மூலம் பெற்று வருகின்றார்.

இந்நிலையில், மாநகராட்சி மேற்கொண்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, அந்த கழிவுநீர் அருகிலுள்ள ஆழ்துளை கிணற்றில் கலந்து, குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் குடும்பத்தில் உள்ளோர் பலர் நோய்தொற்று மற்றும் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்படுவதாகவும், இந்த பிரச்சனை குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறினார்.

அதனால், இன்று கழிவுநீர் கலந்த நீருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ஆஷாவை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். மேலும், தற்போது குடிநீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலையில் உள்ளதால், உடனடியாக சாக்கடை குழாயை சீரமைத்து, பாதுகாப்பான குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.