சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்துறையின் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.

மேலும், புதுமைப்பெண் தமிழ் புதல்வன் திட்டங்களின் மூலமாக கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர்,
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 36 கல்லூரி விடுதிகள் திறக்கப்பட்டுள்ளது. நடபாண்டில் 10 விடுதிகள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக 1242 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை வழங்குவதில் எங்காவது குறைபாடு ஏற்பட்டால் அதனை நேரடியாக தலைமையகத்தில் இருந்து கண்காணிக்கவும் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தவர் Wi-fi நெட்வொர்க் இணைப்பின் மூலமாக
உலகத்தில் எந்த நூலகத்தில் உள்ள இணைப்பைப் பெற்றும் கல்லூரி விடுதி மாணவர்கள் படிக்கும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும்
தமிழகத்தில் 10 கோடியே 59 லட்ச ரூபாய் செலவில் அனைத்து கல்லூரி விடுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து கல்லூரி விடுதிகள் முழுமையாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.