• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

திரௌபதி அம்மன் பூக்குழி திருவிழா கொடியேற்றம்..,

ByKalamegam Viswanathan

Apr 29, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது.இவ்விழாவை முன்னிட்டு நேற்று இரவு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

இவ்விழாவை முன்னிட்டு பிரசாந்த்சர்மா தலைமையில் யாகபூஜை நடந்தது. இந்த வருட பொறுப்பாளர் பரம்பரை அறங்காவலர் அர்ச்சுனன் திருவிழா கொடி ஏற்றக்கூடிய பொருட்களுடன் மேளதாளத்துடன் நான்கு ரத வீதியும் வலம் வந்தார்.இதைத் தொடர்ந்து கோவில் முன்பாக உள்ள கொடிக்கம்பத்தில் திருவிழா கொடியேற்றம் நடந்தது.

பேரூராட்சிதலைவர் ஜெயராமன், முன்னாள் சேர்மன் எம். கே.முருகேசன், கவுன்சிலர்வக்கீல் சத்தியபிரகாஷ், கோவில் பணியாளர்கள், பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன் திருப்பதி ஜவகர்லால் குப்புசாமி மற்றும் உபயதார் கருப்பட்டி அல்லூர் நாயுடு சமைத்தார்கள் கவுன்சிலர் குருசாமி முன்னாள் பேரூராட்சி செயலாளர்கள் முனியராஜ் செங்குட்டுவன் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன்தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.