• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பட்ஜெட் அறிவிப்பால் பொருட்களின் விலையில் அதிரடி மாற்றங்கள்!

ByA.Tamilselvan

Feb 1, 2023

நாடாளுமன்றத்தில் இன்றுதாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மூலமாக சில பொருட்களின் விலையில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
நாட்டின் 2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த தேர்தல் மீது மோடியின் நடப்பு ஆட்சியில் தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட்டாக இது அமைந்தது.
இந்த நிலையில், இன்றைய நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவரது அறிவிப்பின்படி, தொலைக்காட்சி, செல்போன் ஆகிய பொருட்களை தயாரிப்பதற்கான உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றிற்கான இறக்குமதி வரியை உயர்த்துவதாக அறிவித்துள்ளனர்.
விலை குறையும் பொருட்கள்:
• பொம்மைகள்
• மிதிவண்டிகள்
• ஆட்டோமொபைல்
• செல்போன்கள்
• மின்சார வாகனங்கள்
• பேட்டரிகள்
• கேமரா லென்ஸ்கள்
அதிகரிக்கும் பொருட்கள்:
• தங்கம்
• வெள்ளி
• சிகரெட்டுகள்
• வைரம்
• பிளாட்டினம்
• இறக்குமதி செய்யப்பட்ட சமையலறை சிம்னி.