• Tue. Mar 21st, 2023

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட்- பிரதமர் பெருமிதம்

ByA.Tamilselvan

Feb 1, 2023

பாராளுமன்ற பட்ஜெட் நேற்று தொடங்கியது. இதை தொடர்ந்து மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்ட நிதி அமைச்சர், துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். மேலும் பிரதமர் மோடி கூறும் போது…அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட். விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரும் பயனடைவர். புதிய இந்தியாவுக்கு வலுவான அடித்தளமிடும் பட்ஜெட் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *