• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சின்னமனூர் மார்க்கையன் கோட்டையில் இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தையம் – உற்சாகமாக கண்டுகளித்த பொதுமக்கள்

ByJeisriRam

May 30, 2024

சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டையில் இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தையம் – 175 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கெண்டது. சீறிப்பாய்ந்த மாட்டுவண்டிகள் உற்சாகமாக பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டையில் ஊர் பொதுமக்கள் சார்பாக கோடை ஏர் உழவன் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது.

இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தினை சின்னமனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது பாலாண்டி கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த மாட்டுவண்டி பந்தையத்தில் தேனி மற்றும் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் மற்றும் வண்டி சாரதிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாபெரும் மாட்டு வண்டி பந்தையம் இளஞ்ஜோடி, புள்ளிமான், பூஞ்சிட்டு, கரிச்சான், பெரியமாடு என7 வகையான பிரிவுகளில் 175 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசு தொகை , உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

இந்த போட்டியானது மார்க்யன்கோட்டையில் இருத்தது சங்கராபுரம் செல்லும் சாலையில் 14 கிலோமீட்டார் தூரம் வரை நடைபெற்றது. மேலும், இளஞ்ஜோடி மாடுகள் 24 வண்டிகளும் 3 கிலோமீட்டர் தூரமும், புள்ளிமான் ஜோடி மாடுகள் 30 வண்டிகள் 4 கிலொமீட்டர் தூரமும், தேன்சிட்டு 48 வண்டிகள் 2 பரிவுகளாக 5 கிலோ மீட்டர் தூரமும்
பூஞ்சிட்டு 21 வண்டிகள் 6. கிலோமீட்டர் தூரமும், கரிச்சான் ஜோடி மாட்டு 15வண்டிகள் , 7 கிலோமீட்டர் தூரமும், பெரிய மாடு 15 வண்டிகள் 14கிலோ மீட்டர் தூரம் வரை பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்டு ஒவ்வொறு பிரிவிலும் முதலில் கொடி வாங்கும் மாட்டுவண்டி மற்றும வண்டி ஓட்டும் சாரதிக்கு பரிசுகள் வழங்கப்பட்டு கவுரப்படுத்தப்பட்டது. இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை சாலையில் இருபுறங்களில் நின்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.