

தேனி மாவட்டம் சின்னமனூரில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர்களது பிறந்தநாளை முன்னிட்டு அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முப்பெரும் விழாவாக சின்னமனூர்லிருந்து இருந்து மேகமலை செல்லும் சாலையில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

இந்தப் மாட்டுவண்டி பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடு, வண்டிகளுடன் சாரதிகள் கலந்து கொண்டனர். இதில் இளஞ் ஜோடி, புள்ளிமான்,வான் சிட்டு, தட்டான் சிட்டு,தேன்சிட்டு, பூஞ்சிட்டு , கரிச்சான், பெரிய மாடு என 8 வகையான பிரிவுகளில் 200 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் போட்டிகளில் கலந்து கொண்டன.

பந்தயத்தை தேனி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மகனுமான ரவீந்திரநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் கலந்து கொண்ட மாட்டு வண்டிகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. மாடுகளையும், மாட்டு வண்டி சாரதிகளையும் உற்சாகப்படுத்தும் வகையில் சாலையோரம் முழுவதும் நின்று பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் சாரதிகளுக்கு ரொக்க பணமும் பரிசு கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியானது சின்னமனூர்யிலிருந்து மேகமலை செல்லும் சாலையில் சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. மாட்டு வண்டி எல்லை பந்தயத்தை அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கழகத்தைச் சார்ந்தவர்களும் இரட்டை மாட்டு வண்டி விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள், பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.


