நடிகர் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசன் தனது 68 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அதே போல அவரது ரசிகர்கள் , அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பல்வேறு சுவரொட்டிகளை ஒட்டி வாழ்த்தி வருகின்றனர். குறிப்பாக மதுரையில் “மன்னராட்சி வேண்டாம் மக்களாட்சி வேண்டும்.. மீண்டும் வருவார் மருதநாயகமாக” என மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கமலின் ரசிகர்கள் போஸ்டரை அடித்துள்ளது சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மன்னர் ஆட்சி வேண்டாம்… கமல் ரசிகர்களின் பரபரப்பு போஸ்டர்
