• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பாஜக.வை விமர்சிக்க வேண்டாம்… அதிமுக தலைமை அறிவுறுத்தல்..!

Byவிஷா

Sep 26, 2023

அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக.வை விலக்கி உள்ள நிலையில், பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
பாஜக குறித்து பொதுவெளியில் கடுமையாக விமர்சனம் செய்ய வேண்டாம் என முக்கிய நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்திய நிலையில் கட்சி தலைமையால் அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர வேறு யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது.
வேறு கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு எடுப்பார் என்றும் கூட்டணி குறித்து பொதுவெளியில் இறுதி முடிவு எடுக்கும் வரை அதிமுக நிர்வாகிகள் ஊடகங்களில் கூட்டணி குறித்து பேட்டியளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.