• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

ஆர்.ஆர்.ஆர் படத்தால் தள்ளிப்போகும் டான்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் “டான்”. புது இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கியிருக்கிறார். ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் மார்ச் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த அறிவிப்பை சிவகார்த்திகேயன் இரசிகர்கள் அதனைப் பகிர்ந்து கொண்டாடி வந்தார்கள்.
ஆனால், அவர்களுடைய மகிழ்ச்சி சில மணி நேரங்கள் கூட நீடிக்கவில்லை.

ஏற்கெனவே மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28 என்று சொல்லியிருந்த ராஜமெளலியின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ஆர்.ஆர். ஆர் படக்குழு. மார்ச் 25 ஆம் தேதி ஆர் ஆர் ஆர் வெளியாகிறது என்று அறிவித்தார்கள். அந்தப்படத்தையும் தமிழில் லைகா நிறுவனமே வெளியிடவிருக்கிறது. லைகாவின் காலை அறிவிப்பைக் கணக்கில் கொள்ளாமல் ஆர் ஆர் ஆர் படக்குழு தேதியை அறிவித்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த லைகா நிறுவனம் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், டான் படத்தின் வெளியீட்டுத்தேதியைத் தள்ளி வைக்க முடிவு செய்திருக்கிறதாம்.

அடுத்து ஏப்ரல் 14 ஆம் தேதியன்று விஜய்யின் பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய படங்கள் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் ஏப்ரல் 28 ஆம் தேதி டான் படத்தை வெளியிட லைகா நிறுவனம் முடிவு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.