• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிறுவன் மற்றும் அவரது தந்தையை கடித்த நாய்!!

ByKalamegam Viswanathan

Aug 8, 2025

மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே லேக் ஏரியா 15வது தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி (40). இவரது மகனான 8 வயது சிறுவனான செந்தில் காலை பள்ளி செல்வதற்கு தயாராக குளியலறைக்கு சென்றார்.

அப்போது திறந்திருந்த காம்பவுண்ட் கதவு வழியாக புகுந்த தெருநாய் ஒன்று, குளியலறை அருகில் நின்றிருந்த சிறுவன் செந்திலை கை, கால், தொடையில் கடித்து குதறியது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு தந்தை முத்துச்சாமி உள்பட குடும்பத்தினர் வெளியில் ஓடி வந்தனர்.

அந்த நாய், அவர்களையும் விரட்டி கடித்தது. இதில் முத்துச்சாமிக்கு கால், தொடையில் நாய் கடித்து ரத்தம் சொட்டியது.

பின்னர் நாய் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் தகவலின்பேரில் மதுரை மாநகராட்சி சுகாதாரத் துறையின் நாய் பிடிக்கும் ஒரு மணிநேரம் போராடி நாயை பிடித்தனர். படுகாயமடைந்த சிறுவனுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் 3 இடங்களில் தையல் போட்டு தடுப்பூசி செலுத்தினர்.

தந்தை முத்துச்சாமிக்கு தடுப்பூசி செலுத்தினர். இவர்களை நாய் விரட்டி விரட்டி கடிக்கும் சிசிடிவி காட்சி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டை ஒட்டி மீன் கழிவுகள், ஓட்டல்களின் உணவுக்கழிவுகள் உள்ளிட்டவை கொட்டப்படுவதால் தெருநாய்கள் அதிகளவில் இப்பகுதியில் சுற்றி வருகின்றன.

இவை ரோட்டில் செல்வோரை கடித்துக் குதறி வருகின்றன. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இப்பகுதி தெருநாய்களை கட்டுப்படுத்துவது அவசியம். கழிவுகளை சாலையில் கொட்டாமல் ஓட்டல் காரர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

11