• Tue. Mar 17th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சிப்ஸ் பாக்கெட்டை இணைந்து திருடும் நாயும் குரங்கும் : வைரல் வீடியோ..!

Byவிஷா

Feb 7, 2023

கடைக்கு வெளியே தொங்கவிடப்பட்டுள்ள சிப்ஸ் பாக்கெட்டுகளை நாயின் முதுகில் ஏறிக்கொண்டு குரங்கு திருடும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் குரங்குகள் செய்யும் சேட்டைகள் அவ்வப்போது வைரலாகி வந்தாலும் கூட, தற்போது நாயின் உதவியுடன் குரங்கு சிப்ஸ் பாக்கெட்டைத் திருடும் காட்சி அனைவரையும் வியக்க வைக்கிறது.

இதைப் பார்க்கும் இணையவாசிகள் மீண்டும் மீண்டும் இதைப் பார்த்து ரசிக்கின்றனர். அந்த வீடியோவில், நாயின் முதுகில் ஏறிக்கொண்டு, குரங்கு ஒரு கடையில் உள்ள சிப்ஸ் பாக்கெட்டுகளைத் திருடுகிறது. இந்த வீடியோ பல மாதங்களுக்கு முன்பு வந்தாலும், தற்போது இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கின்றனர் இணையவாசிகள்.