• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சமந்தாவை கட்டியணைத்த நயன்தாரா ஏன் தெரியுமா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா, சமந்தா இணைந்து நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல். வரும் 28 ஆம் தேதி படம் வெளியாகிறது. இந்தப்படத்தின் டூ டூ டூ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் நயன்தாரா உடனான உங்களது உறவு பற்றி சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு இந்த படத்தின் டப்பிங் நடைபெற்றபோது சமந்தா நடித்த ஒரு காட்சியை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு சோபாவில் அமர்ந்திருக்கும் நயன்தாரா அவரை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். இந்த வீடியோ வெளியிட்டு தனது பதிலாக கொடுத்துள்ளார் சமந்தா.