• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

விசேஷ வீடுகளில் ஏன் மருதாணி வைக்கிறார்கள் தெரியுமா? இத்தனை நன்மைகள் இருக்காம்!

By

Aug 30, 2021 , ,

மருதாணி வைப்பதில் அழகியல் மட்டுமல்லாமல், ஆரோக்கியக் காரணமும் இருக்கிறது. ஒரு விருந்தோ, விழாவோ நடக்கும்போது, உறவினர்கள் எல்லாம் ஒன்றுகூடுவார்கள். அப்போது, சில ஈகோ பிரச்னைகள் எழுவதற்கு வாய்ப்பிருக்கிறது. பிரச்னைகளால் வரும் டென்ஷனைக் குறைக்கிற குணம் ஹென்னாவில் இருக்கிறது.

  • மருதாணி வாதங்கள் வராமல் இருக்கவும், அதனால் வருகிற வலியை நீக்கவும் இது உதவும்.
  • மாதவிடாய்க்கு முன்னதாகப் பெண்களிடம் ஒருவித எரிச்சலும் சிடுசிடுப்பும் காணப்படும். சிலருக்கு ஒற்றைத் தலைவலி வரும். இவற்றுக்கெல்லாம் காரணம் ஹார்மோன் இம்பேலன்ஸ்தான். இயற்கை வைத்தியம், விரல் முனைகளைத் தலைக்கான பகுதியாகப் பார்க்கிறது. அங்கு ஹென்னா வைப்பதால், ஒற்றைத் தலைவலி போகும். எரிச்சலும் சிடுசிடுப்பும் மட்டுப்படும்.
  • மருதாணி வைப்பதற்கு மிகவும் ஏற்ற இடங்கள் உள்ளங்கைகளும் உள்ளங்கால்களும்தாம். உடலில் இருக்கிற அத்தனை நரம்புகளின் பிரதிபலிப்புப் புள்ளிகளும் இந்தப் பகுதிகளில்தான் இருக்கின்றன. இங்கே ஹென்னா வைப்பதால், உடல் குளிர்ச்சியாகும், ரத்த ஓட்டம் சீராகும், இதயப் படபடப்பு, ரத்த அழுத்தம் இரண்டும் கன்ட்ரோல் ஆகும், ஸ்ட்ரெஸ் குறையும்.
  • மருதாணி வைக்கப்படுகிற இடங்களான நகங்கள் மற்றும் சருமத்தில் ஃபங்கல் இன்ஃபெக்‌ஷன் வராது. சருமத்தின் ஹெல்மெட் இது.
  • மருதாணி இலைகளை அரைத்து, சின்னச் சின்ன வறட்டிகளாகக் காய வைத்து, தேங்காய் எண்ணெயில் பொரித்தெடுத்து அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்து வந்தால், இளநரையை வரவிடாமல் தடுக்கும். வந்துவிட்டாலும் மறைக்கும்.
  • மருதாணிக்கும் சரி, அதன் பூவுக்கும் சரி, நம்மை ஆழ்ந்து தூங்க வைக்கிற சக்தி இருக்கிறது. நம் தாத்தாக்கள், இரவுகளில் மருதாணி செடிக்கருகில் ஈசி சேரில் சாய்ந்துகொண்டிருந்ததற்கான காரணம் இதுதான். தூக்கமின்மை பிரச்னையிருப்பவர்கள், மருதாணிப் பூங்கொத்தைத் தலையில் வைத்துக்கொள்ளலாம்.
  • சுகர் அதிகமாக இருப்பவர்களுக்கு நரம்புகள் சீக்கிரம் பலவீனமாகிவிடும். அதனால், சிலருக்கு கால்கள் குடைவதுபோல வலிக்கும், சிலருக்கு பாதம் மரத்துப்போகும், சிலருக்கு பாதத்தில் முள் போல குத்தும் அல்லது நெருப்பில் கால் வைத்ததுபோல எரியும். நீரிழிவுப் பிரச்னை இருப்பவர்களுக்கு, காலில் ரத்த ஓட்டம் சரியாக இருக்காது. அதிலும் கால் கட்டை விரல் வரைக்கும் ரத்த ஓட்டம் பாயாது. அதனால்தான், அவர்களுக்கு கால் கட்டை விரலில் டயபடிக் அல்சர் வருகிறது. நீரிழிவு இருப்பவர்கள் மருதாணியுடன் மஞ்சள் வைத்து அரைத்து கட்டை விரலில், தொடர்ந்து வைத்து வந்தால், அந்தப் பகுதியிலும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆனால், இத்தனை பலன்களும் மருதாணி இலைகளை அரைத்து வைக்கும்போதுதான் கிடைக்கும்.