• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

விஜய்க்கு வில்லனாக நடிக்க விஷால் கேட்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ByA.Tamilselvan

Nov 3, 2022

வாரிசு’ திரைப்படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிட அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ‘வாரிசு’ வெளியீடுகள் குறித்த அப்டேட் வந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 67’ குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது. விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் ஒரு தனியார் தொலைக்காட்சியிடம் பேசுகையில், வரும் டிசம்பர் மாதம் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இப் படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வாரிசு முடித்தபிறகு இந்த படத்தின் ஷூட்டிங்கை விஜய் உடனே தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஷாலை நடிக்க வைக்க இருக்கிறாராம் லோகேஷ். அது பற்றிய செய்தி சில தினங்களுக்கு முன்பே வெளியாகி இருந்தது.விஷால் ஹீரோவாக வாங்கும் சம்பளத்தை விட இந்த படத்திற்காக அதிகம் சம்பளம் வில்லனாக நடிக்க கேட்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.விஷாலை 20 கோடி வரை சம்பளம் இந்த படத்திற்காக வாங்க இருக்கிறார் என தெரிகிறது.