• Sat. Apr 27th, 2024

இந்த ஆப்பை பயன்படுத்தாதீங்க! – ஆர்.பி.ஐ. எச்சரிக்கை..!

மொபைல் பயன்பாட்டாளர்கள் யாரும், sRide எனப்படும் மொபைல் ஆப்பை பயன்படுத்த வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில், ‘sRide எனும் ஆப் ரிசர்வ் வங்கியிடம் உரிய அனுமதி பெறாமலேயே செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஹரியானா மாநிலம் குர்கானில் பதிவு செய்யப்பட்டு, செயல்பட்டு வருகிறது. கார்பூலிங் சேவையை sRide நிறுவனம் ப்ரீபெய்ட் அடிப்படையில் வழங்கி வருகிறது. எனினும், பரிவர்த்தனை மற்றும் செட்டில்மெண்ட் சிஸ்டம் சட்டம் 2007-ன் கீழ் ரிசர்வ் வங்கியிடம் sRide நிறுவனம் அனுமதி பெறவில்லை.

எனவே, sRide ஆப்பை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம். ரிசர்வ் வங்கியின் அனுமதியே பெறாமல் பரிவர்த்தனை சார்ந்த செயல்களில் ஈடுபடும் ஆப்களை நம்பி பொதுமக்கள் தங்கள் பணத்தை அனுப்பக்கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *