• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

வதந்திகளை செய்தியாக வெளியிட வேண்டாம் – நாகர்சுனா வேண்டுகோள்

சமந்தா – நாகசைதன்யா விவாகரத்து குறித்து நாகர்ஜுனா மனம் திறந்ததாக பரவி வரும் பேட்டி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என நாகார்ஜுனா கூறியுள்ளார்…தனியார் பொழுதுபோக்கு இணையதளத்திற்கு நாகசைதன்யா வழங்கிய நேர்காணல் ஒன்று வைரலாகியது.

அதில், சமந்தா முதலில் விவாகரத்துக்கு விண்ணப்பித்ததாக நாகார்ஜுனாவை மேற்கோள் காட்டினார், “நாக சைதன்யா தனது முடிவை ஏற்றுக்கொண்டார், ஆனால் அவர் என்னைப் பற்றி அதிகம் கவலைப்பட்டார், நான் என்ன நினைப்பேன், குடும்பத்தின் நற்பெயருக்கு என்ன நடக்கும் என்று அவர்கள் கவலைப்படவில்லை என கூறியிருந்தார்.

இதுகுறித்து தற்போது அந்த கட்டுரை போலியானது என நாகார்ஜுனா ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் “சமந்தா மற்றும் நாகசைதன்யா பற்றிய எனது அறிக்கையை மேற்கோள்காட்டி சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் முற்றிலும் முட்டாள்தனம்!! வதந்திகளை செய்தியாக வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.