நடிகை சமந்தா சுவிட்சர்லாந்து க்கு சுற்றுலா சென்றுள்ளார் அங்குகுழந்தையாக மாறி அவர் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது கீழே விழுந்து புரளும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் சுமார் ஏழு வருடகாலமாக உருகி… உருகி… காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை சமந்தா மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஆகிய இருவரும் சில வருடங்களில் பிரிவார்கள் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
கடந்தாண்டு ஒரே நேரத்தில் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என்கிற எமோஷ்னல் பதிவுடன் இருவரும் தங்களது விவாகரத்தை அறிவித்தனர்.
விவாகரத்துக்கு பின் எழுந்த சில வதந்திகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான சமந்தாவும், நாக சைதன்யாவும் தற்போது அதில் இருந்து மீண்டு சினிமாவில் தங்களுடைய இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கியுள்ளனர்.
விவாகரத்துக்கு பின் இவர்கள் இருவரது சினிமா வாழ்க்கையும் ஏறுமுகமாக உள்ளது. தமிழ், தெலுங்கு சினிமாவில் மட்டுமே நடித்து வந்த சமந்தா விவாகரத்துக்கு பின் இந்தி சினிமா, ஹாலிவுட் என அவரது சினிமா வாய்ப்புக்கள் விரிவடைந்துள்ளதுடன் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்து வெற்றிபெற்றிருக்கின்றார்
அதேபோல் நாக சைதன்யாவும், தனது தெலுங்கு சினிமாவில் இருந்து இந்தி சினிமா வரை சென்றுவிட்டார்.
அங்கு அமீர்கானுடன் லால் சிங் சட்டா என்கிற படத்தில் நடித்துள்ளார். இதுதவிர சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பங்கார்ராஜு என்கிற படம் பம்பர்ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள சமந்தா தனது கவலை களை, வலிகளை மறந்து பனிச்சறுக்கு செய்கையில் கீழே விழுந்து புரளும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு“நான் சிறு குழந்தைகளுடன் என் பனிச்சறுக்கு பயணத்தை பன்னி ஸ்லோப்பில் தொடங்கினேன்.
100 முறை விழுந்து ஒவ்வொரு முறையும் எழுந்தேன். நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்.எனது அனுபவத்தை உற்சாகமாகவும் அச்சுறுத்தலாகவும் மாற்றியதற்கு நன்றி. என்னைப் பயிற்றுவித்ததற்காக அன்பான பயிற்சியாளருக்கு நன்றி ஒரு பெரிய கூக்குரல்என்று தெரிவித்துள்ளார் சமந்தா.