• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்த தி.மு.க-வினர்-வைரல் வீடியோ

BySeenu

Apr 16, 2024

கோயம்புத்தூர் லோக்சபா தொகுதியில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் இத்தொகுதி கவனம் பெற்று உள்ளது. 7 முறை இடதுசாரிகளும் 5 முறை காங்கிரஸும் வென்ற தொகுதி என்பதால் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க இடையே மிகக் கடும் போட்டி நிலவுகிறது.

கோவை லோக்சபா தொகுதியில் இடதுசாரிகள் 7 முறையும் அதற்கு அடுத்ததாக காங்கிரஸ் 5 முறையும் வென்று உள்ளது. பா.ஜ.க இங்கு 2 முறை வென்று உள்ளது. இம்முறை தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இங்கு களம் காண்கிறார். இதனால் தமிழ்நாடு மட்டுமல்ல தேசிய அரசியலும் கோவை தொகுதியின் முடிவுகளை பெரும் எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டு இருக்கின்றன. கோவையில் தி.மு.க வேட்பாளரான கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க மேயராக இருந்தவர். காங்கிரஸும் இந்த தொகுதியில் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டது, இடதுசாரிகளுக்கும் வாக்கு வங்கி கணிசமாக இருக்கிறது. கோவை குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பின் பா.ஜ.க வலுவாக காலூன்றி நிற்கிறது. அ.தி.மு.க வும் கோவையை தங்களது வலுவான பகுதியாக உருவாக்கி வைத்து உள்ளது. கோவை லோக்சபா தொகுதியில் வெல்லப் போவது யார் ? என்பது கணிக்க முடியாத யூகத்துக்கு உரிய தொகுதியாக உள்ளது.

இந்நிலையில் பணம் பட்டுவாடா மூலம் வெற்றி பெறலாம் என தி.மு.க தற்பொழுது பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக தகவல்கள் வந்து கொண்டு உள்ளன. இந்நிலையில் துடியலூர் பகுதி 15 வது பொது மக்களுக்கு தி.மு.க வினர் பணம் கொடுக்கும் போது அவர்களை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்து உள்ளனர், இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.