• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திமுக எம்பிக்கள் சஸ்பெண்ட்… ஜனநாயக படுகொலை என்ற மாஸ்க் அணிந்து வந்த மற்ற எம்பிக்கள்…

Byகாயத்ரி

Jul 27, 2022

ஜனநாயக படுகொலை என்ற வாசகம் அடங்கிய மாஸ்க் அணிந்து திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர். பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ஒரு நாள் கூட முழுமையாக பாராளுமன்ற செயல்பாடுகள் நடைபெறவில்லை.

இந்நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் அமளி செய்த எம்பிக்கள் அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் எதிர்க் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதலில் பதினொரு எம்பிக்கள் அதன்பின் எட்டு எம்பிக்கள் அதன் பின் மீண்டும் ஐந்து எம்பிக்கள் என மொத்தம் 23 எம்பிக்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அடுத்தடுத்து எதிர்க் கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதிர்கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஜனநாயக படுகொலை என்ற வாசகம் அடங்கிய மாஸ்க் அணிந்து திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர். 6 திமுக எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து மற்ற எம்பிக்கள் மாஸ்க் மூலம் எதிர்ப்பு தெரிவித்தனர்.