• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பா.ஜ.க.வில் இணையும் தி.மு.க எம்.பி…!

Byவிஷா

Aug 25, 2022

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சமுத்து, பா.ஜ.க.வில் இணைய இருப்பதாக வந்த தகவலையடுதது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சமுத்து தலைமையின் கீழான, 2021 சட்டசபைத் தேர்தலில் ஐஜேகே கட்சிக்கு பெரம்பலூர் மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, பச்சமுத்து அமோக வெற்றி பெற்றார். இதன் பிறகு பச்சமுத்து பெரம்பலூர் தொகுதி பக்கமே தலைகாட்டவில்லை என்கிற குற்றச்சாட்டு தொகுதி மக்கள் மத்தியில் எழுந்தது.
இதனை ஈடு செய்யும் வகையில், இந்த ஆண்டும் தொகுதியை சேர்ந்த 300 மாணவர்களுக்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில், இலவசக் கல்வி வழங்குவதாக கூறி தன்னுடைய இருப்பை பச்சமுத்து தக்கவைத்துக்கொண்டார். திமுக கூட்டணியிலிருந்து பச்சமுத்து வெளியேறிவிட்டாலும் மக்களவை உள்பட முக்கியமான இடங்களில் எல்லாம் இன்னமும் திமுக எம்.பியாகவே தன்னை அடையாளப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சமீபகாலமாக நிருபர்களை சந்திக்கும் பச்சமுத்து மத்திய பாஜ அரசுக்கு ஆதரவாகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் கருத்துகளை கூறி வருகிறார்.
தமிழ்நாடு வளர்ந்த மாநிலம் என சொல்வது உண்மை இல்லை. நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்புக்கு அரசியலே காரணம். தமிழக கல்வி துறை செயல்பாடுகள் சரியில்லை. பள்ளிகளில் வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் நிலை உள்ளது. அரசு கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்புகள் இல்லை, என்பன போன்ற குற்றச்சாட்டுகளை செல்லும் இடங்களில் எல்லாம் தெரிவித்து திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை உறுதி செய்து வருகிறார்.