• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் தி.மு.க.வினர் மறியல் போராட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பு தி.மு.க.வினர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது கண்டித்து முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா.பிரகாஷ் தலைமை யில் அவைத்தலைவர் திரவியம் பேரூர் துணை செயலாளர் கண்ணன்,முன்னாள் கவுன்சிலர் பாலசுப்ரமணியன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் நாச்சி குளம் பாஸ்கரன் சிதம்பரம் பன்னீர் செல்வம், முரளி ,அரவிந்தன், ராம் மோகன், ராஜசேகரன்,ஆறுமுகம், மருது பாண்டியன்,பாலமுருகன் கொரியர் சிவா உள்ளிட்ட தி.மு.க.வினர் 100 பேர் த.வெ.க அரசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் தயாராக இருந்த சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பரண்டு ஆனந்தராஜ் தலைமை யில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி, சப் இன்ஸ்பெக்டர் திவ்யாமற்றும் போலீசார் திமுகவினரைகுண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிஅங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.