• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்ட புகைப்பட போஸ்டர் ஒட்டிய திமுகவினர்

ByP.Thangapandi

Dec 29, 2024

ஜீஎஸ்டி வரி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எப்போது அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொள்ள போகிறார்? என உசிலம்பட்டியில் திமுகவினர் போஸ்டர் ஒட்டி கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்க கோரி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டு நூதன போராட்டம் நடத்தினார்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி, பெட்ரோல், டீசல், கேஸ் மற்றும் ஜீஎஸ்டி வரி உயர்வுக்கு எப்போது சாட்டையால் அடித்துக் கொள்ள போகிறார்??? என அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்ட புகைப்படத்துடன் கேள்வி எழுப்பி போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.

உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளான மதுரை ரோடு, தேனி ரோடு, பேருந்து நிலையம், வத்தலக்குண்டு ரோடு, பேரையூர் ரோடு என பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டி அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பியுள்ளது உசிலம்பட்டி பகுதியில் பேசு பொருளாக மாறியுள்ளது.