• Tue. Apr 30th, 2024

தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு

ByA.Tamilselvan

Jul 3, 2022

நாமக்கல்லில் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாஸின் துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே உள்ள பொம்மைகுட்டைமேட்டில் தி.மு.க. சார்பில் “உள்ளாட்சியில் நல்லாட்சி” என்ற தலைப்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று காலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த மாநாட்டை தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகர்மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் என சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மாநாட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி. வரவேற்று பேசினார். தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., தி.மு.க முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு . நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பிலும், மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இம்மாநாட்டிற்கு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 13 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *