• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைய திமுக தான் காரணம்.. கிருஷ்ணசாமி பேட்டி..

Byகுமார்

Sep 12, 2022

நீட்டிற்கு எதிராக திமுக மேற்கொண்ட பிரச்சாரம் மாணவர்கள் மத்தியில் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையை குறைக்க செய்ததே தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு காரணம் என என மதுரையில் கிருஷ்ணசாமி பேட்டி….
மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்
“இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் காவல்துறை மெத்தனமாக நடந்து கொண்டுள்ளது,
மதுரையிலிருந்து பரமக்குடி சென்ற போது பல்வேறு இடங்களில் காவல்துறை தடுத்து நிறுத்தியது, 4 மணி நேரத்திற்கு மேலாக பயணம் செய்ய வேண்டிய சூழல் உருவானது, பரமக்குடிக்கு செல்ல விடாமல் காவல்துறை வாகனங்கள் குறுக்கே நிறுத்தப்பட்டது, எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மற்றோரு அமைப்புக்கு அஞ்சலி செலுத்த காவல்துறை அனுமதித்தது, ஒரே சமூகத்திற்கு உள்ளாக மோதலை உருவாக்க காவல்துறை நினைக்கிறது, இம்மானுவேல் சேகரன் நினைவிட பொறுப்பை மாற்ற வேண்டும், இம்மானுவேல் சேகரனுக்கு தொடர்பில்லாதவர்கள் நினைவிடம் உள்ளது., புதிய தமிழகம் கட்சியிடம் நினைவிட பொறுப்பை வழங்க வேண்டும், இம்மானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி செலுத்த கூடாது என இருட்டடிப்பு செய்ய இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், காவல்துறை திட்டமிட்டு செய்து வருகிறது, திமுகவின் தேர்தல் அறிக்கையில் 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது, ஒரு வாக்குறுதியையும் திமுக செயல்படுத்தவில்லை, அனைத்து தேர்தல் வாக்குறுதிக்கும் நேர்மாறாக திமுகவின் நடவடிக்கைகள் உள்ளது, மின் கட்டண உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாது, மின் கட்டண உயர்வால் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும், தமிழக அரசு மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும், மின்சார வாரியத்தில் உள்ள ஊழலை சரி செய்தாலே மின் கட்டணத்தை உயர்த்த தேவையில்லை, மின் கட்டண உயர்வை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் வரும் 20ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்
நீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் .
நீட்டிற்கு எதிராக திமுக மேற்கொண்ட பிரச்சாரம் மாணவர்கள் மத்தியில் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையை குறைக்க செய்துள்ளது.இந்த குற்றத்தை திமுக செய்ய கூடாது இது வரலாற்று பிழையாக மாறிவிடும் .இனிமேல் நீட் இருக்கும் அதற்கு ஆயத்தமாகுங்கள் என தமிழக அரசு சொல்ல வேண்டும் .அரசு பள்ளிகளில் நீட் பயிற்சி கொடுக்காததான் காரணமாக அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறவில்லை
நீட் விவகாரத்தில் அரசியலுக்காக ஏழை எளிய மாணவர்களை பலியாக்க கூடாது.இன்றைய சூழலில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாத சூழல் உள்ளது.அரசியலுக்காக நீட் விவகாரத்தில் திமுக தவறாக செயல்பட்டு வருகிறது, நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக பொய் பிரச்சாரம் செய்கிறது.தமிழில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கியுள்ள நிலையில் ஏன் ஹிந்தி மொழியை குறை சொல்ல வேண்டும் என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கருத்திற்கு பதில் அளித்துள்ளார்.முதல்வர் சர்வாதிகார போக்குடன் பேசி வருகிறார், மக்களின் குரல்களை முதல்வர் செவி சாய்த்து கேட்பதில்லை” என கூறினார்.