பெண்களே இல்லாமல் கூட்டம் நடைபெறுகிறது. இதுதான் கட்சி சில பேர் நலத்திட்ட உதவி கொடுக்கிறேன் எனக் கூறி, கூட்டத்தை உட்கார வைப்பார்கள் இனி இது போன்று தான் கூட்டம் நடக்க வேண்டும். இது போன்று கூட்டம் சேர்ந்தால் எவன் தயவு தாட்சேபனையும் தேவையில்லை என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியுள்ளார்.
பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட திமுக இளைஞரணி சார்பில், பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே இந்தி திணிப்பு நிதி பகிர்வில் தமிழகம் புறக்கணிப்பு நாடாளுமன்ற மறு வரையறை ஆகியவற்றை எதிர்க்கும் வகையில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தா மோ அன்பரசன் உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். அமைச்சர் தாமோ அன்பரசன் தலைமையில் திமுகவினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அதன் பிறகு மேடையில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன்...,
தேர்தல் நெருங்குகிறது, தேர்தல் களம் சூடு பிடிக்கும், கண்டவன் எல்லாம் ரோட்டுக்கு வருவான் ,நாங்கள்தான் நாட்டையே பாதுகாக்கிறேன்னு சொல்லுவான், எதையும் நம்ப கூடாது, வாழ்வோ சாவோ மக்களோடு இருக்கிற ஒரே கட்சி திமுக தான் என்றும்,
ரொம்ப நாள் பிறகு பெண்களே இல்லாமல் கூட்டத்தை பார்க்க முடிகிறது
இதுதான் கட்சி. சில நபர்கள் நலத்திட்ட உதவிகள் தருவதாக கூறி உட்கார வைத்துக்கொண்டு பேசும்போது , நான்கு நபர்கள் எழுந்தால் பாதியில் பலர் எழுந்து விடுவார்கள் என்றும், இனி கூட்டங்கள் இந்த முறையில் தான் கூட்ட வேண்டும் .

இது போன்ற கூட்டம் வைத்திருந்தால் யார் தயவும் தாட்சேபனின்றி எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறலாம் என பேசினார்.