• Tue. Feb 10th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

திமுக சார்பில் நான்கரை ஆண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம்..,

ByK Kaliraj

Feb 9, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வடக்கு ரதவீதியில் உள்ள அண்ணா திடலில் சாத்தூர் நகர திமுக சார்பில் நான்கரை ஆண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு கழக தேர்தல் பணி குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன் சாதனை விளக்க உரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் நிர்மலாகடற்கரை ராஜ், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சிறப்பு உரையாற்றினார். அவர் பேசியது

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல் மக்களுக்காக சேவை செய்து வருவதாகவும் தான் முதல்வராக பொறுப்பேற்ற முதல் கையெழுத்து பெண்களுக்கான தாக இருந்தது என்றும் அவர்கள் இலவசமாக கட்டணமில்லா பேருந்தில் பயணிக்க முதல் கையெழுத்திட்டார் என்றும் கூறினார். பெண்களுக்கு மட்டுமின்றி இளைஞர்கள் பள்ளி மாணவர்கள், மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், துப்புரவு பணியாளர்கள், வரை அனைவரின் முன்னேற்றத்திற்காகவும் சிந்தனை செய்து உழைத்து வருபவர் நமது முதல்வர் மு. க. ஸ்டாலின் என்று பெரிமிதத்துடன் தெரிவித்தார்.

நாளை முதல் துப்புரவு பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

பள்ளி குழந்தைகள் முதல் துப்புரவு பணியாளர்கள் வரை அவர்களின் தேவை அறிந்து செயலாற்றி வருபவர் நமது முதல்வர்

மகாராஷ்டிராவில் மொழி மராட்டியமாக இருந்து வந்தது என்று ஆனால் தற்பொழுது மராட்டியத்தை அழித்து இந்தியாக மாறிவிட்டது என்றும் தெரிவித்தார். மத்தியில் ஆளும் பிஜேபி அரசானது தமிழை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் ஆனால் அவர்களின் எண்ணம் தமிழ்நாட்டில் ஈடேறாது என்றும் தெரிவித்தார்.

தமிழை அழிக்க நினைக்கும் எண்ணத்தை தடுக்கும் தலைவராக நமது முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் உள்ளார் என்று தெரிவித்தார். இந்தியாவிலேயே பிஜேபியை கண்டு பயப்படாத ஒரே முதல்வராக நமது ஸ்டாலின் அவர்கள் தான் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

எதிலும் ஸ்ட்ராங்காக நமது முதல்வர் நிற்பார் என்று யார் யாரோ கட்சி ஆரம்பிக்கிறார்கள் கட்சி ஆரம்பித்த மறுநாளே முதல்வராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர் அணி மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒரு லட்சம் இளைஞர்கள் பங்கு பெற்றார்கள் ஆனால் மாநாடு கட்டுக்கோப்புடன் நடைபெற்றது.

எந்தவித அசம்பாவிதம் ஏற்படவில்லை. நமது கட்சியில் உள்ள இளைஞர்கள் கட்டுக்கோப்புடன் செயல்படுவதாகவும் அவர்களை கட்சி நிர்வாகிகள் சிறப்பாக வழி நடத்துவதாகவும் தெரிவித்தார்.

மாநாட்டு திடலில் நமது முதல்வர் கம்பீரமாக ராஜா போல் நடந்து வந்தார்.நமது கட்சி நிர்வாகிகள், இளைஞர்கள், ஆரவாரத்துடன் முதல்வர் ஸ்டாலினை வரவேற்றனர்.

ஆனால் மற்றவர்களைப் போல் ஆட்டம் போட்டுக் கொண்டு அசம்பாவிதம் செய்யும் நிர்வாகிகள் நம்மிடம் இல்லை என்று கூறினார் .

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சாத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், கடற்கரைராஜ், ஆகியோர் செய்திருந்தனர்.