• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

டிச.18-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டிச.18-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

திமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் 18-ம் தேதி மாலை 5.30 மணி அளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 18-12-2021 சனிக்கிழமை மாலை 5.30 மணி அளவில், சென்னை, ‘கலைஞர் அரங்கில்’ நடைபெறும். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.