திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் பாஜக கவுன்சிலரை சுற்றி நின்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மாமன்ற 14வது வார்டு உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தனபாலன் தனது பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் கடந்த பல வருடங்களாக முழங்கால் அளவு தேங்கியுள்ளது இதே பகுதியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் மைத்துனர் சுருளி என்பவர் குடியிருந்து வருகிறார் அவர் மீது கோபம் இருந்தால் அதை விட்டுவிட்டு பொதுமக்கள் நலன் கருதி கழிவுநீர் வாய்க்காலை சரி செய்யுங்கள் எனக் கூறினார்
இந்நிலையில் திமுக வார்டு உறுப்பினர்கள் அவர்களது இருக்கையில் இருந்து எழுந்து 14வது வார்டு உறுப்பினர் இருக்கையை நோக்கி ஓடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுக உறுப்பினர்கள் அனைவரும் வாக்குவாதத்திலும் ஒருமையிலும் பேசியதால் மாநகராட்சி மன்ற கூட்டமே பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.








