• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பெண் வி.ஏ.ஓ.வை எட்டி உதைத்த திமுக கவுன்சிலர் கைது

Byவிஷா

Apr 29, 2024

விழுப்புரம் அருகே கூடலூர் கிராமத்தில் பெண் விஏஓ ஒருவரை திமுக கவுன்சிலர் எட்;டி உதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 19ம் தேதி விழுப்புரம் மாவட்டம் முகையூர் அடுத்த ஏ.கூடலூர் கிராமத்தில் வாக்குச் சாவடியில் திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ் காந்தி பெண் விஏஓவை தாக்கினார். இந்நிலையில் ராஜீவ்காந்தியை போலீசார் கைது செய்துள்ளனர். வாக்குப்பதிவின் போது இரவு நேரத்தில் வாக்குச்சாவடியில் பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் சாந்தி உணவு வழங்கினார்.
அப்போது அந்த பகுதிக்கு வந்த திமுக கவுன்சிலர் ராஜீவ்காந்தி, திமுகவினருக்கு நான் வாங்கி வந்த உணவை எப்படி அரசு அதிகாரிகளிடம் எடுத்துச் செல்வது என்று வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் அந்த பெண் அதிகாரியின் கன்னத்தில் அறைந்தார். அங்கிருந்த அரசு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இரவு மீண்டும் வாக்குச்சாவடிக்கு வந்த திமுக நிர்வாகி முற்றிலும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பெண் விஏஓவை தாக்கியதாகவும், முடியை இழுத்து வயிற்றில் எட்டி உதைத்ததாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் பெண் விஏஓவை திமுக நிர்வாகி தாக்கியதில் வேதனை அடைந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பெண் அதிகாரியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் சாந்தி மற்றும் கிராம மக்கள் காணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது திமுக நிர்வாகியும், பெண் விஏஓ சாந்தியும் ஒரே இடத்தில் உணவு வாங்கினர். அந்த உணவை பணியில் இருந்த அரசு அதிகாரிகளிடம் வி.ஏ.ஓ., கொடுத்துள்ளார். இதை ராஜீவ் காந்தி வாங்கிய உணவை கொடுத்ததாக நினைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தேர்தல் பிரசாரத்தின் போது விஏஓ சாந்திக்கும், திமுக நிர்வாகிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக முன்விரோதம் காரணமாக அவர் போதையில் தாக்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தலைமறைவாக இருந்த திமுக நிர்வாகி ராஜீவ் காந்தியை போலீசார் கைது செய்துள்ளனர்.