

கரும்பாட்டூர் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு தலைமையில் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில், அகஸ்தீஸ்வரம் வட்டார காங்கிரஸ் தலைவர் டேனியல், மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பொன் ஜாண்சன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி கவுன்சிலர் பிரேம் ஆனந்த், மாவட்ட பிரதிநிதி தமிழ்மாறன், ஒன்றிய பிரதிநிதி அகஸ்தியலிங்கம், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் பாக்கியசெல்வம், கரும்பாட்டூர் ஊராட்சி காங்கிரஸ் செயலாளர் பால்ராஜ் உள்ளிட்டோர் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

