• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அரசு நிலத்தை அபகரிக்கும் திமுக நகர பொறுப்பாளர்.. முதலமைச்சரின் பேச்சு காத்தோட போச்சா..!மக்கள் கொந்தளிப்பு

Byகாயத்ரி

Jan 21, 2022

கீரிப்பட்டியில் அரசு ஊழியர்களை மிரட்டி வரும் திமுக நகர பொறுப்பாளர், மன உளைச்சலில் கூட்டுறவு சங்க ஊழியர்கள்.

திமுகவைச் சேர்ந்தவர்கள் தவறு செய்தாலும் சின்ன குற்றத்தில் ஈடுபட்டாலும், இந்த ஸ்டாலின் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்..! இது அண்ணா மீது, கலைஞர் மீது ஆணை..! என்று சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சரின் பேச்சு காத்தோட போச்சா..!என்று மக்கள் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் கீரிப்பட்டி பேரூராட்சியில் உள்ள தமிழ்நாடு அரசின் S.55 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி 1942 -ஆம் ஆண்டு முதல் நல்ல லாபத்தில் இயங்கிவருகிறது. இதில் சுமார் 3000 -க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.இந்நிலையில் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் அரசு ஊழியர்களை மிரட்டி பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்து வரும் திமுக நகர பொறுப்பாளர் காங்கு (எ) காங்கமுத்து, கட்டப்பஞ்சாயத்து இடிமுரசு (எ) ராமகோவிந்தன் மற்றும் டிரைவர் சதீஷ், பால் வியாபாரி ஆதிமூலம், சாராய வியாபாரி விமல்சேகர் ஆகியோர் அவ்வப்போது அலுவலகத்திற்கு சென்று அரசு ஊழியர்களை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.

திமுக நகர பொறுப்பாளர் காங்கமுத்து

மேலும் நேற்று மாலை அலுவலகத்தில் இருந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உருவ படங்கள் இந்த அலுவலகத்தில் இருக்க கூடாது என்றும் எங்களை கேட்காமல் யாருக்கும் பயிர்க்கடன் வழங்க கூடாது, இனி நாங்கள் சொல்வதை தான் நீங்கள் கேட்க வேண்டும் மீறினால் தொலைத்து விடுவோம் என மிரட்டல் விடுவதோடு செய்யாத குற்றத்தை செய்தது போல எழுதி கொடு என மிரட்டுவதால் கூட்டுறவு சங்க ஊழியர்கள் மன உளைச்சலில் திணறி, தற்கொலை முயற்சிக்கு தள்ளப்படுகின்றனர்.

திமுக கட்சிக்கும், மக்களின் நேர்மையான ஆட்சிக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொள்கைக்கும், சென்னை உயர் நீதிமன்றத்திற்கும், எதிராக அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்வது மற்றும் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, சட்டவிரோதமாக மது பானங்கள் விற்பனை செய்வது போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் அடியாட்களை கொண்டு ஈடுபட்டு வரும் மாற்று கட்சியிலிருந்து குறுக்கு வழியில் வந்த கீரிப்பட்டி (பேரூராட்சி) திமுக நகர பொறுப்பாளர் காங்கு (எ) காங்கமுத்து மீது நடவடிக்கை எடுக்க திமுக கட்சியினரும் பொதுமக்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.உளவுத்துறை களமிறங்கி விசாரித்தால் இக்கதயின் உண்மை காட்சிகள் வெட்ட வெளிச்சமாகும்…