• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சுரண்டையில் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!

தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சியாக இருந்து தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் நகர்மன்ற தேர்தல் என்பதால் திமுக தலைமை கழகம் அறிவித்த 27 வேட்பாளர்கள் இன்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் படத்தின் முன்பு வேட்புமனுவை வைத்து ஆசீர்வாதம் பெற்று தேர்தல் அலுவலரிடம் மேற்கு மாவட்ட செயலாளர் சிவ.பத்மநாதன் தலைமையில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சுரண்டை நகரக் கழகச் செயலாளர் ஜெயபாலன் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனி துரை, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் MPM அன்பழகன், தேர்தல் பொறுப்பாளர்கள் APஅருள், சாக்ரடீஸ், சங்கரநயினார் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.