• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

வலையபட்டியில் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டி வாக்கு சேகரிப்பு..,

ByKalamegam Viswanathan

Apr 8, 2026

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு கூத்தியார்குண்டு, கருவேலம்பட்டி, பெரிய ஆலங்குளம், ஒத்த ஆலங்குளம், கொம்பாடி, தொட்டியாபட்டி,வலையபட்டி ஆகிய கிராமத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டி வலையபட்டி பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டார் பின்னர் பொதுமக்களிடம் பேசும்போது:

கண்டிப்பாக 200 தொகுதிகளில் வெற்றி பெற்று நமது தலைவர் தான் முதல்வராக போகிறார் திராவிட மாடல் 2.0 ஆட்சியாக அமையும் போது இந்த திருப்பரங்குன்றம் தொகுதி எதிர்க்கட்சி தொகுதியாக இருக்கணுமா? ஆளுங்கட்சி தொகுதியாக இருக்க வேண்டுமா? என்பது உங்கள் கையில் தான் உள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் தான் இந்த தொகுதி உள்ளது. நான் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்லும் போது உங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வேன். வாக்குறுதி கொடுப்பது மட்டுமில்லை அதை நிறைவேற்றவும் செய்வோம். இந்த முறை திமுக அதிமுகவை நேரடியாக களத்தில் சந்திக்க உள்ளோம்.

பாறைக்குளம் கண்மாய் சீரமைக்கப்பட்டு விவசாயத்திற்கு கொண்டுவரப்படும். பள்ளிவாசல் சுற்றுச்சுவர், மயானத்தின் சுற்றுச்சுவர் கட்டித் தரப்படும், புதிய நியாய விலை கடை கட்டி தரப்படும் என உறுதி அளித்தார்.