• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

வெல்லும் தமிழ் பெண்கள் வீடு வீடாக திமுகவினர் பரப்புரை..,

ByK Kaliraj

Feb 27, 2026

சிவகாசியில் திமுக அரசின் சாதனைகளை விளக்கி வெல்லும் தமிழ் பெண்கள் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

திமுக அரசின் ஐந்து ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையில் பிப்.23 முதல் மார்ச் 8ம் தேதி வரை வெல்லும் தமிழ் பெண்கள் எனும் தலைப்பில் வீடு வீடாக பரப்புரை செய்ய வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு முதல் வர் மு.க.ஸ்டாலின் அறி வுறுத்தினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்

தங்கம் தென்னரசு ஆலோசனையின் பேரில் சிவகாசி மாநகர திமுக சார்பாக மாநகராட்சியில் உள்ள 120 பூத்களிலும் வெல்லும் தமிழ் பெண்கள் தேர்தல் பரப்புரையை திமுகவினர் நேற்று மாலை தொடங்கினர்.

திருத்தங்கல் மண்ட லத்தில் தேர்தல் பரப்புரையை மாநகர செயலா ளர் எஸ்.ஏ.உதயசூரியன் தொடங்கி வைத்தார். மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தார். மக ளிர் அணியினர் 30க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று குடும்ப தலை

விகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளை சந்தித்து திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி ஆதரவு திரட்டினர். இதில் பொதுக்குழு உறுப் பினர் பொ.சக்திவேல், பகுதி செயலாளர் கருணாநிதி பாண்டியன், கவுன் சிலர்கள். திமுக நிர்வாகி கள் கலந்து கொண்டனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம். புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட திமுக அரசின் சாதனை திட்டங்களை வீடுவீடாக திமுகவினர் எடுத்துக் கூறி பரப்புரை மேற்கொண்டனர்.