• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

மாறி ..மாறி.. கட்சி நிர்வாகிகளை தூக்கும் திமுக மற்றும் அதிமுக…

Byகாயத்ரி

Feb 15, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை எதிர்த்தும், திமுகவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாகக் கூறி நிர்வாகிகள் 35 பேரை அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வேட்புமனுக்களை வாபஸ் பெறுதல், கழக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுதல் முதலிய காரணங்களால் 35 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்படுகின்றனர்.அதன்படி, கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு, கோவை மாநகர், திருச்சி மாநகர், மதுரை மாநகர், மயிலாடுதுறை, சிவகங்கை, சென்னை புறநகர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுகவினர் 35 பேர், இன்று முதல் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுகின்றனர்.கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் 111 பேர் தற்காலிகமாக நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி மாறி மாறி திமுகவும், அதிமுகவும் கட்சி நிர்வாகிகளை தடம் தெரியாமல் தூக்கி வருகிறது.