• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திருச்செங்கோடு நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி…

ByNamakkal Anjaneyar

Nov 6, 2023

நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக உள்ள 200 பெண்கள் மற்றும் 60 ஆண்கள் என 260 பேருக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான சேலை மற்றும் வேட்டி, சர்ட்டுகள் வழங்கப்பட்டது. முன்னாள் நகர்மன்றத் தலைவர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு வழங்கினார். புத்தாடைகளை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட தூய்மை பணியாளர்கள், தீபாவளி பரிசினை கண்ட மகிழ்ச்சியில் திளைத்த தூய்மை பணியாளர்கள் மகிழ்ச்சி பொங்க, நகர்மன்றத் தலைவருக்கு தங்களது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.