• Fri. May 17th, 2024

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் குழந்தைவேல் அவர்களின் இல்ல திருமண விழா..!

ByNamakkal Anjaneyar

Nov 9, 2023

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வடக்கு வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் குழந்தைவேல் அவர்களின் இல்ல திருமண விழா பள்ளிபாளையம் அடுத்துள்ள அத்தனூர் கோவில் அருகே அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . இந்த நிகழ்வில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் மணமக்களை வாழ்த்திய பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இன்றைக்கு தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். டீசல் விலையை குறைக்க வேண்டும் வாகன வரி மிக அதிகமாக உள்ளது. அதனை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. மோட்டார் வாகன தொழிலில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள் தற்போது கடன் சுமையால் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் .. தீபாவளி பண்டிகை நேரத்தில் இத்தகைய வேலை நிறுத்தத்தை அரசு அனுமதிப்பது தவறு !
உடனடியாக டீசல் மற்றும் வரியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்! சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுடன் கலந்து பேசி சுமூக தீர்வு எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாக வலியுறுத்துகிறது!

நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரையில் பல இடங்களில் 24 மணி நேரமும் சேர்ந்து கடைகளிலே மது வியாபாரம் நடைபெற்று வருகிறது என்பது தலைகுனிவாக இருக்கிறது. சாதாரண மக்களுக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்துகிறது.

பள்ளி கல்லூரி முன்பாக போதை பொருள் கூல் லிப் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருப்பது வெளிப்படையாகவே தெரிய வருகிறது. இதனால் மாணவர் சமுதாயம் சீரழிந்து வருகிறது . தமிழக மக்கள் நலம் கருதி கூல் லிப் விற்பனையை தமிழக அரசு தடுத்து நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!

கல்லூரிகளிலே ராகிங் கொடுமை என்ற செய்தி வேதனை அளிக்கிறது” வருத்தம் அளிக்கிறது” குறிப்பாக பெற்றோர்கள் !மாணவர்களை ஆளாக்கி நன்கு படிக்க வேண்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கிற துறையில் உயர்ந்து விளங்க வேண்டும் நாட்டிற்கு வருங்காலங்களில் உயர்ந்த ஸ்தானத்தை அடைய வேண்டுமென பெருமை சேர்க்க வேண்டுமென நினைக்கின்றனர். தற்போதைய இந்த ராகிங் செய்தி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்தை கொடுத்திருக்கிறது.. தமிழகத்திலே எங்கேயும் மீண்டும் இது போல ஒரு நிலை ஏற்படக் கூடாது என கல்வி நிறுவனங்கள் முறை படுத்தி கொள்ள வேண்டும்… அதேபோல அரசினுடைய பள்ளிக்கல்வித்துறை கண்காணிப்போடு இதில் செயல்பட வேண்டும்

தீபாவளி பண்டிகை காலத்தில் விலைவாசியை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும். பருப்பு, எண்ணெய், வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்தக்கூடிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது. எனவே விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தேர்வை பொருத்தவரையில் திராவிட முன்னேற்ற கழகம் புதிதாக கையெழுத்து இயக்கம் தொடங்கி பெற்றோர்களுக்கு மன உளைச்சலை கொடுக்கிறது. நீட் தேர்வுக்கான அவர்களுக்கான முடிவு கிடைக்க வேண்டுமென்றால் அகில இந்திய அளவில் மக்கள் மன்றத்திலே அவர்களுக்கு ஏற்றவாறு வெற்றியை அவர்கள் பெற வேண்டும். அல்லது நீதிமன்றத்தில் வெற்றியை பெற வேண்டும். இரண்டும் இல்லாமல் வாக்கு வங்கிக்காக அரசியலுக்காக பெற்றோர்களையும் மாணவர்களையும் குழப்புவது தேவையற்ற ஒன்று. குறிப்பாக கல்வியில் அரசியலைப் புகுத்துவது கூடாது என தமாக வலியுறுத்துகிறது.

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தல் பணிக்கான செய்யத் தொடங்கி இருக்கிறோம். தீபாவளிக்கு பிறகு உடனடியாக ஆறு மண்டல கூட்டங்கள், ஆறு மாவட்ட தலைநகரங்களில் டிசம்பர் மாதம் இறுதிவரை நடைபெறுகிறது. இதற்கிடையிலே தமிழக தமாக மாணவரணி கூட்டம் ஒரு மாவட்டத்தில் நடைபெற உள்ளது.. இன்னொரு மாவட்டத்திலே தமிழ் மாநில காங்கிரசின் இளைஞர் அணி கூட்டம் நடைபெற உள்ளது .
கட்சி நிர்வாகிகளை ஆங்காங்கே சந்தித்து தேர்தலுக்கான வலுவான பணியை செய்ய அறிவுறுத்தி வருகிறோம் .
மண்டலம் கூட்டங்களை நடத்த கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள். மக்கள் சந்திப்பை அதிகரிக்கும் வகையிலான பணிகள் நடைபெற்று வருகிறது.
தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை ஜனவரி மாதம் தை பிறந்த பிறகு ஏகத்துடைய தலைவர்கள்இன்றைக்கு தமிழக முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் டீசல் விலையை குறைக்க வேண்டும் வாகன வரி மிக அதிகமாக உள்ளது அதனை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது மோட்டார் வாகன தொழிலில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள் தற்போது கடன் சுமையால் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என அவர்கள் தெரிவிக்கின்றனர் தீபாவளி பண்டிகை நேரத்தில் இத்தகைய வேலை நிறுத்தத்தை அரசு அனுமதிப்பது தவறு உடனடியாக டீசல் மற்றும் வரியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுடன் கலந்து பேசி சுமூக தீர்வு எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாக வலியுறுத்துகிறது.

நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரையில் பல இடங்களில் 24 மணி நேரமும் சேர்ந்து கடைகளிலே மது வியாபாரம் நடைபெற்று வருகிறது என்பது தலைகுனிவாக இருக்கிறது சாதாரண மக்களுக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்துகிறது.

பள்ளி கல்லூரி முன்பாக போதை பொருள் கூறின் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருப்பது வெளிப்படையாகவே தெரிய வருகிறது. இதனால் மாணவர் சமுதாயம் சீரழிந்து வருகிறது தமிழக மக்கள் நலம் கருதி கூல் லிப் விற்பனையை தமிழக அரசு தடுத்து நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்லூரிகளிலே ராகிங் கொடுமை என்ற செய்தி வேதனை அளிக்கிறது வருத்தம் அளிக்கிறது குறிப்பாக பெற்றோர்கள் மாணவர்களை ஆளாக்கி நன்கு படிக்க வேண்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கிற துறையில் உயர்ந்து விளங்க வேண்டும் நாட்டிற்கு வருங்காலங்களில் உயர்ந்த ஸ்தானத்தை அடைய வேண்டுமென பெருமை சேர்க்க வேண்டுமென நினைக்கின்றனர் தற்போதைய இந்த ராகிங் செய்தி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்தை கொடுத்திருக்கிறது தமிழகத்திலே எங்கேயும் மீண்டும் இது போல ஒரு நிலை ஏற்படக் கூடாது என கல்வி நிறுவனங்கள் முறை படுத்தி கொள்ள வேண்டும் அதேபோல அரசினுடைய பள்ளிக்கல்வித்துறை கண்காணிப்போடு இதில் செயல்பட வேண்டும்.

தீபாவளி பண்டிகை காலத்தில் விலைவாசியை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும் பருப்பு எண்ணெய் வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்தக்கூடிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது எனவே விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தேர்வை பொருத்தவரையில் திராவிட முன்னேற்ற கழகம் புதிதாக கையெழுத்துக்கள் தொடங்கி பெற்றோர்களுக்கு மன உளைச்சலை கொடுக்கிறது நீட் தேர்வுக்கான அவர்களுக்கான முடிவு கிடைக்க வேண்டுமென்றால் அகில இந்திய அளவில் மக்கள் மன்றத்திலே அவர்களுக்கு ஏற்றவாறு வெற்றியை அவர்கள் பெற வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் வெற்றியை பெற வேண்டும் இரண்டும் இல்லாமல் வாக்கு வங்கிக்காக அரசியலுக்காக பெற்றோர்களையும் மாணவர்களையும் குழப்புவது தேவையற்ற ஒன்று குறிப்பாக கல்வியில் அரசியலைப் புகுத்துவது கூடாது என தமாக வலியுறுத்துகிறது.

நாடாளுமன்றத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தல் பணிக்கான செய்யத் தொடங்கி இருக்கிறோம். தீபாவளிக்கு பிறகு உடனடியாக ஆறு மண்டல கூட்டங்கள் ஆறு மாவட்ட தலைநகரங்களில் டிசம்பர் மாதம் இதுவரை நடைபெறுகிறது. இதற்கிடையிலே தமிழகத்தின் உடைய தாமாகவனுடைய மாணவரணி கூட்டம் ஒரு மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இன்னொரு மாவட்டத்திலே தமிழ் மாநில காங்கிரசின் இளைஞர் அணி நடைபெற உள்ளது. கட்சி நிர்வாகிகளை ஆங்காங்கே சந்தித்து தேர்தலுக்கான வலுவான பணியை செய்ய அறிவுறுத்தி வருகிறோம். மண்டலம் கூட்டைகளுக்கு கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள் மக்கள் சந்திப்பை அதிகரிக்கும் வகையிலான பணிகள் நடைபெற்று வருகிறது தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை ஜனவரி மாதம் தை பிறந்த பிறகு இயக்கத்துடைய தலைவர்கள், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் கருத்துக்கு ஏற்றவாறு மக்களுடைய மனநிலையை தமிழ் மாநில கட்சி பிரதிபலிக்கும். தமிழகத்தின் முக்கிய கூட்டணி கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எப்போதும் இருக்கும். வெற்றி தோல்விகளை தாண்டி இயக்க உணர்வோடு எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விளங்கும் என தெரிவித்தார். வெற்றி தோல்விகளை தாண்டி இயக்க உணர்வோடு எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விளங்கும் என தெரிவித்தார். நிகழ்வின் பொழுது நாமக்கல் மாவட்ட தலைவர் செல்வகுமார் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *