அறந்தாங்கியில் புதுக்கோட்டை மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் குத்து சண்டை போட்டி நடைபெற்ற போது மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு பயிற்சிகளை மையங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு போட்டியிட்டனர். இவற்றில் வயது எடை மற்றும் தகுதிப் பட்டங்களின் அடிப்படையில் பலருக்கும் பரிசுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.


இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பர்வேஷ், லயன் ராமசாமி, டி.எஸ்.பி.சரவணன் வெஸ்ட்லி பள்ளியின் தாளாளர் ஹரிஹரன், எம் எஸ் ஏ குரூப் ஆஃப் ஸ்கூல் சாலை மாமணிசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் கலந்து கொண்ட மற்றும் பதக்கங்கள் பெற்ற மாணவ மாணவியரை பாராட்டினார்கள்.
மேலும் இப் போட்டிகளில் பரிசு பெற்ற வீரர் வீராங்கனைகள் அடுத்த மாதம் சென்னையில் நடைபெற இருக்கும் மாநில கராத்தே போட்டிக்குத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


இப்போட்டியை புதுக்கோட்டை கராத்தே சங்கத் தலைவர் சென்சாய் தமிழரசன் மற்றும் செயலாளர் ஆண்ட்ரூஸ் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்து போட்டிகளை நடத்தி முடித்தனர். மேலும் மாநில கராத்தே சங்க தலைவர் ஜேகாப் தேவகுமார் மற்றும் செயலாளர் அல்தாப் ஆலர் ஆகியோர் மாணவ மாணவியரை பாராட்டி ஊக்குவித்தனர். இப் போட்டியை காண்பதற்காக மாணவ மாணவியரின் பெற்றோரும் திரண்டு வந்து தங்களது பிள்ளைகளின் திறமைகளை பார்த்து ரசித்தனர்.




