• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

விரைவில் நடிகர் விஜய் கட்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

Byவிஷா

Feb 23, 2024

விரைவில் நடிகர் விஜய்யின் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாகப் பிரித்து பொறுப்புகள் வழங்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ல் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அப்போதே அவர் 2026 சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு எனத் தெரிவித்தார். இந்த மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனவும் யாருக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம் எனவும் கூறினார். இடைப்பட்ட இந்த 2 வருடங்களில் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுபடப் போவதாகவும் அவர் கூறினார். இருப்பினும் தனது ஹைஸ்பீடு அரசியலை இப்போதே தொடங்கிவிட்டார் விஜய். அவரது அடுத்தடுத்த அரசியல் செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் உற்று நோக்கப்படுகிறது.
சமீபத்தில் சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு ஆலோசனைகளும் முடிவுகளும் எடுக்கப்பட்டன. குறிப்பாக 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் எனவும் மகளிர் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற முடிவு ஹைலைட்டாக அமைந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாகப் பிரித்து பொறுப்புகள் வழங்க தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பு 10 நாட்களுக்குள் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.