• Sun. Apr 28th, 2024

அமெரிக்காவில் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து

Byவிஷா

Feb 23, 2024

அமெரிக்க அதிபர் ஜோபைடன் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, 1.53 லட்சம் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கலை அறிவியல் உள்பட இளங்கலை பட்டப்படிப்புக்கு கல்விக்கட்டணம் மிக அதிகமாகும். கல்விக்கட்டணம் கட்ட வசதியில்லாத பெரும்பாலான அமெரிக்க மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் வேலைக்கு சென்று விடுகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் கல்விக்கடன் பெற்று கல்லூரிப் படிப்பை தொடர்கிறார்கள். ஆனால் கல்லூரி முடித்து வேலைக்கு செல்லும் போது கல்விக்கடன் பெரும் சுமையாகி விடுகிறது.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அவருடையை மனைவி மிஷல் ஒபாமா இருவருக்கும் நீண்ட நாள்களுக்குப் பிறகே கல்விக்கடனை திருப்பி செலுத்த முடிந்தது. எனவே இந்த கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி அதிபர் ஜோ பைடன் மாணவர்களுக்கு வழங்கிய கல்விக்கடனை ரத்து செய்வதாக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் தகுதியுடைய கிட்டத்தட்ட 1.53 லட்சம் பேருக்கு 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான மாணவர் கடன்களை தனது நிர்வாகம் ரத்து செய்வதாக அதிபர் ஜோ பிடன் புதன்கிழமை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிடென், 430 பில்லியன் டாலர் மாணவர்கள் கடனை ரத்து செய்வதற்கான அவரது பரந்த திட்டத்தை ஜூன் மாதம் உச்ச நீதிமன்றம் தடுத்த பிறகு, கடன் நிவாரணத்தைச் சமாளிப்பதற்கான பிற வழிகளைக் கண்டுபிடிப்பதாக உறுதியளித்தார். தற்போது கல்விக்கடன்களை ரத்து செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *