வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு நாகப்பட்டினத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் பூபதி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் வரவேற்றார்.

மாவட்ட செயலாளர் தனஞ்செயன், முன்னாள் மாநில பொருளாளர் மாரிமுத்து, வட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசாமி ஆகியோர் பேசினர். சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை அரசு உருவாக்க வேண்டும். அனைத்து நிலையிலான காலிப்பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும். போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்கு நிர்ணயம் செய்வதை கைவிட வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில் உச்சவரம்பு 5 சதவீதம் என்பதை ரத்து செய்து ஏற்கனவே இருந்தது போல் 25 சதவீதமாக மாற்றம் செய்ய வேண்டும். ஜூலை மாதம் 1ம் தேதி வருவாய்த்துறை தினமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட பொருளாளர் சுதன்குமார் நன்றி கூறினார்.