
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சேவா சங்கம் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலருமான, மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரதீப்குமார்
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பரை வலியுறுத்தும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வடக்கு வாசல் பகுதி அருகே மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில் வரையப்பட்டுள்ள ரங்கோலி கோலத்தினை பார்வையிட்டு, விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் வாக்களிக்கலாம் என தெரிவித்துள்ளது. அதற்காக
கீழ சிந்தாமணி பகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களை தேர்தல் திருவிழாவில் பங்கேற்க அவர்களின் இல்லங்களுக்கே சென்று அழைப்பிதழ்களை
மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
