
நாகர்கோவில் அருகேயுள்ள செட்டிதெரு பகுதியில் இன்று மத்திய அரசின் 9 ஆண்டுகளின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசாரம் மற்றும் குமரி சங்கமம் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களை பாஜக மாவட்ட பொருளாளரும், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவருமான டாக்டர் முத்துராமன் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் தேவ் ஆகியோர் வீடு வீடாக சென்று வழங்கினார். உடன் நகர தலைவர் ராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு செயலாளர் சந்திரசேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.