விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி யில் பா.ஜ.க. சார்பில் 15ந் தேதி (இன்று) நடைபெற வுள்ள சுதந்திர தினத்தன்று தேசிய கொடிகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில் பொதுமக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. மாநில உள்ளாட்சி பிரிவு செயலாளர் கரந்தமலை ஐயா பால்சாமி கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவர் பாலமுருகன் ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளர் ராமலிங்கம் இளவரசன் கோதண்டம் முனியாண்டி வீரபத்திரன் பெருமாள் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

