• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

யூடியூபர் மாரிதாஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து

திமுக மீது அவதூறு பரப்பியதாக,யூடியூபர் மாரிதாஸ் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

திமுக மீது அவதூறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் மீது முன்னதாக திமுக பிரமுகர் உமரிசங்கரால் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இதனையடுத்து,தன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி யூடியூபர் மாரிதாஸ்,உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் அவர் கூறுகையில்:”திமுக மீது அவதூறு பரப்பும் வகையில் எனது வீடியோ உள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட திமுக பிரமுகர் உமரிசங்கர் என்பவர்,தூத்துக்குடி மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.என் மீது உமரி சங்கர் வழக்கு தொடர முகாந்திரம் இல்லை.எனவே என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து,இதுகுறித்து பதில் அளிக்க உமரி சங்கருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில்,யூடியூபர் மாரிதாஸ் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.